2:1

குரானில் விவாதிக்கப்படும் , விளக்கப்படும் விஷயங்கள் என்ன என்பது பற்றி விளங்காதவரை அதனை நாம் புரிந்து கொள்வது எளிதானதல்ல . மொழியாக்கங்கள் நமது மொழியில் இருந்தாலும் கூட அதனை, குரானை , விளங்குவதிலிருந்து நம்மை தடுப்பது எது ? என்பதை பற்றி சிந்திக்கும்பொழுது, பல்வேறு காரணங்கள் அதற்க்கு கூறப்பட்டாலும் அதனையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில்தான் உள்ளோம் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகின்றேன் .
குரானின் 2 வது அத்தியாயத்தில் 2:1 வரும் அலிப் லாம் மீம் என்ற வார்த்தை எதனை விளக்குகின்றது என்பதை எப்படி புரிந்து கொள்வது ? இந்த வசனத்திற்க்கு அடுத்து வரும் வசனம் இந்த வார்த்தைகளை வேதம் என்று கூறுவதேன் ? அந்த வேதம் தான் முத்தக்கீன்களுக்கு நேர்வழி காட்டும் என்று கூறுவதேன் ? ஆனால் பெறும்பாலான மொழியாக்கங்கள் “அது” என்று மொழிபெயர்ப்பதற்க்கு பதிலாக “இது” என்று மொழிபெயர்த்தது ஏன் ? குரானில் “இது” என்பதற்க்கு பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தை வேறு இருக்கும்பொழுது, 2:2 ல் அந்த வார்த்தை ஏன் பயன்படுத்தப்படவில்லை?
பார்க்க 10:1. அலிஃப், லாம், றா. இவை ஞானம் நிறைந்த வேதத்தின் வசனங்களாகும்.
இந்த வசனத்தை எடுத்துக்கொள்வோம், இதில் “இவை” என்பதற்க்கு “தில்க” என்ற அரபி வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது எனவே “ இவை” என்பது “அலிஃப், லாம், றா” வைத்தான் குரிக்கின்றது . இதே போல்தான் 2:2. ல் இது, திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு நேர்வழிகாட்டியாகும். , ஆனால் இந்த வசனத்தில் “தில்க” என்ற வார்த்தை பயன்படுத்தப்படாமல் “தாலிக” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது . இந்த இரண்டிற்ர்கும் ஒரே அர்த்தம் என்று கூறுவது தவறானதாகும். எனவே “தாலிக” என்பதற்க்குண்டான “அது” என்ற அர்தத்தை இங்கு பயன்படுத்துவோமாயின், இந்த “அது” என்பது இதற்க்கு முந்திய வசனத்தில் உள்ள “அலிப் லாம் மீமைத்தான் குரிக்கின்றது என்பதை விளங்க முடியும் ..அப்படி இருக்க ஏன் இங்கு “இது”
என்று மொழிபெயர்ப்பாளர்களால் மொழிபயர்க்கப்படவேண்டும் ? என்பதுதான் விளங்க முடியாததாக உள்ளது .
ஒருவேளை அலிப் லாம் மீம் என்பது எப்படி வேதமாக இருக்க முடியும் மேலும் எப்படி அது நேர்வழிகாட்டியாக இருக்க முடியும்? அதற்க்கு எந்த விதமான விளக்கங்களும் இல்லையே என்பதை மனதில் கொண்டு “அது” என்பதற்க்கு பதிலாக “இது” என்று போடுவதன் மூலம் படிப்பவர்களுக்கு ஒரு அர்தத்தை கொடுக்க முடியும் என்று நினைத்திருப்பார்களோ ? அலிப் லாம் மீம் என்பது புரிந்து கொள்ள முடியாத விஷயமாக நிச்சயமாக இருந்திருக்க வாய்ப்பில்லை, அது புரிந்து கொள்ளப்பட்ட விஷயம்தான் என்பதை நாம்தான் ஏற்க்க மறுக்கின்ரோம் என்பதுதான் உண்மை. முத்தக்கீன் என்பது அரபியில் பெயர் வைத்துக்கொண்டு, நாமாக ஏற்படுத்திக்கொண்ட சடங்குகளை செய்பவர்களாக மட்டும்தான் இருக்க முடியும் மேலும் குரான் மட்டும்தான் நேர்வழி காட்டும் போன்றவைகள்தான் “இது” என்று மொழிபெயர்ப்பதன்மூலம் ஏற்படுத்தப்படும் கருத்துக்களாகும்.
ஆனால் நேர்வழிபெறுவதற்க்கு சிந்தனை, தேடல் .. பொன்றவைகள்தான் தேவையானதாகும் .எனவே அலிப் லாம் மீம் என்பது நேர்வழி பெறுவதற்க்குண்டான செயல் முறைகளைத்தான் குரிகின்றது . அத்தகைய செயல்முறைகள கடைபிடிப்பவர்கள்தான் முத்தகீன்கள் ஆவார்கள் . அவர்கள் யாராக வேண்டுமானாலும் எந்த மொழியில் பெயர் வைத்தவர்களாகவும் இருக்கலாம். இத்தகையவர்களால்தான் இறைவனால் ஏற்படுத்தப்பட்டுள்ள வேத்திலிருந்து நேர்வழியினைப் பெறமுடியும் . வேதம் என்பது குரான் மட்டும்தானா ? என்ற கேள்வி எழ வாய்ப்பிருக்கிறது . குரானில் கூறப்படும் குரான் மற்றும் வேதம் என்பவைகள் எதனைக் குரிக்கின்றது என்பது விரிவாக பார்க்கப்படவேண்டிய விஷயம். முடிந்தால் அதனையும் குரானிலிருந்து பின்னர் பார்க்கலாம்.
2:1-5 ல் கூறப்பட்டுள்ள விஷயங்கள் ஒருவனின் வெற்றிக்கு வழிகாட்டக்கூடிய சூத்திரங்களாகும், இத்தகைய விஷயங்களைகுரித்தே குரான் முழுவதிலும் பல்வேறு கொணங்களில் விளக்கப்பட்டுள்ளது .
இறைவனை நோக்கி